சுவாச நோய்களினால் பாதிக்கப்படும் சிறுவர்கள் -பெற்றோர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

0
59

சுவாச நோய்களால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளை, சிறுவர் வைத்தியசாலை அல்லது அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுமாறு சிறுவர் சுவாச நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டொக்டர் சன்ன டி சில்வா பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுவாச நோய்கள் தொடர்பான, சர்வதேச மாநாடு குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.

அந்த நோய்களில் இருந்து விடுபட மருத்துவரின் பரிந்துரையின் பேரில் வழங்கப்படும் இன்ஹேலர்களின் பயன்பாடு மிகவும் முக்கியமானது என்றும் அவர் கூறினார்.

குழந்தைகளுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய்கள் வர வாய்ப்புகள் அதிகம் எனவும் இது ஒரு வெளித்தோற்றாத நோய் எனவும் தெரிவித்துள்ளார்.

மரபணு தாக்கம் உள்ள குழந்தைகளுக்கு ஆஸ்துமாவை உருவாக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் மூன்றில் ஒருவர் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என களுபோவில தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் சுவாச நோய் நிபுணர் டொக்டர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

இதனால்தான் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம் எனவும் வீட்டில் ஒருவர் தடிமனால் பாதிக்கப்பட்டால், வீட்டில் இருக்கும் கர்ப்பிணித் தாய், குழந்தை அல்லது வயதானவர்களை அது தொற்றக் கூடும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here