சூழல் புனிதமானது என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கம் நாட்டு மக்களுக்கு தூய குடிநீரினை பெற்றுக்கொடுப்பதே -சரத் ஏக்கநாயக்க தெரிவிப்பு!!

0
88

சிவனொளி அடிவாரத்திலிருந்து உற்றெடுத்து ஓடும் தூய குடிநீர் எவ்வித மாசுமின்றி அழுக்குகள் கலக்காது தூயநீராக நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காகவே சூழல் புனிதமானது என்ற நிகழ்ச்சித்திட்டம் ஐந்தாவது வருடமான நல்லதண்ணி பிரதேசத்தை அடிப்படையாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

இதன் நோக்கம் இந்த புனித பூமியில் ஊற்றெடுக்கும், நீரூற்றுக்களையும் வன விலங்குகளை இயற்கை சூழலையும் பாதுகாத்து அதனை எதிர்கால சந்ததியினருக்கு பெற்றுக்கொடுத்தலேயேயாகும்.

இந்த புனித பூமி பிரதேசத்தில் கழிவுகளை அகற்றுவதனால் இந்த பிரதேசம் பல்வேறு சூழல் சீர் கேடுகளுக்கு ஆளாகி வருகின்றன. இதனால் இயற்கை அழகு பாதிக்கப்படுவதுடன் பெருமதி மிக்க உயிரினங்கள் மற்றும் செடி கொடிகள் அழிந்து போகின்றன.

நாம் சிவனொளிபாதமலையினை தர்சிக்க வீட்டிலிருந்து புறப்படும் போது மிகவும் புனித மாகவும் தூய்மையாகவுமே புறப்பட்டு வருகின்றோம். ஆனால் நாம் இங்கு வந்து நாம் கொண்டு வந்த கழிவுகளை சுற்றுபுறச் சூழலில் தூக்கி எறிவதனால் பல விதமான பாவங்களுக்கு ஆளாகி வருகின்றோம் என மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க 23.04.2018 அன்று நல்லதண்ணி நகரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

DSC02399 DSC02413

சர்வதேச புவி தினத்தினை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சிவனொளிபாதமலையினை சுத்தப்படுத்தி அதன் கழிவுகளை உத்தியோக பூர்வமாக மஸ்கெலியா பிரதேசசபையிடம் ஒப்படைக்கும் நிழ்கவு 23.04.2018 அன்று முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு மஸ்கெலியா பிரதேசசபையின் தவிசாளர் ஜி.செண்பகவள்ளி, ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளரும், மஸ்கெலியா பிரதேசசபையின உபதலைவருமான பெரிசாமி பிரதீபன், அட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் பி.ஸ்ரீதரன், அட்டன் கோட்ட பொலிஸ் அதிதியட்சகர் அம்பேபிட்டிய உட்பட பொலிஸ் அதிகாரிகள், இரானுவ வீர்ர்கள், அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

முதலமைச்சர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

பல வருட காலமாக இங்குள்ள பிரதேச மக்களும் மஸ்கெலியா பிரதேச சபை, அம்பகமுவ பிரதேச சபை போன்ற இந்த கழிவுகளை அகற்றுவதற்கு பெரும் சிரமங்கள் மத்தியில் அகற்றி வருகிறார்கள். அதற்கு அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்.

பல வருடகாலமாக மக்கள் இந்த சூழலில் போடப்பட்ட குப்பை கூலங்களை பல்கலைகழக மாணவர்கள் உட்பட அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் கழவுகளை அகற்றுவதற்கு வருடா வருடம் எமக்கு உதவி வருகின்றன. எனினும் இது தொடர்ந்தும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால் இங்கு வரும் பொது மக்கள் இதனை உணர வேண்டும். எமக்கு இருக்கும் அழகிய மிகவும் பெருமதிமிக்க சொத்தான சிவனொளிபாதமலையினை பாதுகாத்து வரும் சந்ததியினருக்கு பெற்றுக்கொடுப்பது எமது அனைவரினதும் கடமையாகும். எனவே அதனை உணர்ந்து சிவனொளிபாதமலையினை தரிசிக்க வருபவர்கள் தாங்கள் கொண்டு வரும் கழிவுகளை இங்கு இடாது அதனை மீண்டும் தங்களது வீடுகiளுக்கே கொண்டு செல்லுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்;.

கடந்த டிசம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை மாத்திரம் சிவனொளிபாதமலை பிரதேச புனித பூமியிலிருந்து சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேலான பிளாஸ்டிக் போத்தல்கள் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here