சூழ்ச்சியினால் நல்லாட்சியினை கவிழ்க்க முடியாது! ; ஜனாதிபதி

0
159

அரசியல் ரீதியான சதி முயற்சிகளினால் இந்த அரசாங்கத்தை வீழ்த்த முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பொலன்னறுவையில் தெரிவித்துள்ளார்.

தேசிய நடமாடும் சேவையின் இறுதி நாள் நிகழ்வு இன்று பொலன்னறுவையில் இடம்பெற்றது. இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த அரசாங்கம் ஐந்து வருட காலத்துக்கு நிலைக்கும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,

பொலன்னறுவை மற்றும் திருகோணமலை பிரதேசங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலையின் முழுமையான அபிவிருத்தி நடவடிக்கை சிங்கப்பூரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here