சென்னையில் குலுங்கிய கட்டிடங்கள்~அலறி தெருவெங்கும் ஓடிய மக்கள்..!

0
131

சென்னை அண்ணா சாலை அருகே லாயிட்ஸ் ரோடு பகுதியில் இன்று லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று மாடி கட்டிடத்தில் அதிர்வு உணரப்பட்டதால் அங்கிருந்த ஊழியர்கள், பொது மக்கள் அலறியடித்து அச்சத்துடன் வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் இன்று காலை 10.15 மணிக்கு திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் லாயிட்ஸ் ரோடு அருகே நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து வெளியே ஓடிவந்ததனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

ஆனால் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் எத்தனை புள்ளிகள் பதிவானது என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் கட்டிடம் குலுங்கியதா என்றும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் போர் போடும் பணி நடைபெற்று வருவதாகவும் இதனால் அருகில் இருந்த கட்டிடங்கள் குலுங்கியதாகவும் இதை நிலநடுக்கம் என நினைத்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் வெளியே ஓடி வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதேசமயம் அண்ணாநகரிலும் சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் பெசன்ட் நகர், ஆழ்வார்பேட்டை, அடையாறு, அண்ணாநகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம் ஆலந்தூர், மயிலாப்பூர், மாதவரம், கொளத்தூர் உள்ளிட்ட சில இடங்களில் லேசான நில அதிர்வை மக்கள் உணர்ந்ததாகவும் கூறப்படுகின்றது.

அதேவேளை இலங்கையில் இன்று சிறைய அளவிலான நிலநடுகம் உணரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here