சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

0
95

கடந்த சில மாதங்களாக வீட்டு உபயோக சிலிண்டரின் விலை உயராமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 3 மாநில தேர்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக சிலிண்டர் விலையை உயர்த்தாத எண்ணெய் நிறுவனங்கள் தற்போது தேர்தல் முடிவடைந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே சிலிண்டர் விலையை உயர்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் சமையல் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இதுவரை 1068 ரூபாய் என இருந்த சமையல் எருவாய் சிலிண்டர் இனிய 1118.50 என விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.223 உயர்ந்து 2268 என விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது

சிலிண்டர் விலை ஏற்றம் பொதுமக்களை பெரும் அதிர்ச்சி உள்ளாக்கி உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here