சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார் எம். எஸ். தோனி (M.S.Dhoni)

0
141

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலக தோனி முடிவு செய்துள்ளார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எம். எஸ். தோனி கேப்டன் பொறுப்பை ரவிந்திர ஜடேஜாவிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளார். இருப்பினும் இந்த தொடரில் மட்டுமல்ல இதற்கு பிறகும் தோனி சென்னை அணியில் தொடர்ந்து இடம் பெறுவார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜடேஜா 2012ஆம் ஆண்டிலிருந்து சென்னை அணியில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 2008-ம் ஆண்டு முதல் 12 சீசன்களில் தோனி வழிநடத்தியள்ளார். இதில் 4 முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது.

இந்த 12 சீசன்களில் ஒரே ஒருமுறை மட்டுமே பிளே ஆஃபுக்கு தகுதி பெறவில்லை.

நாற்பது வயதாகும் மகேந்திர சிங் தோனி கடந்த 2014-ம் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 2017-ல் கேப்டன் பதவியில் இருந்து விலகிய தோனி 2020-ம் ஆண்டு வரை ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஐபிஎல் 2021 சீசன் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதுவே தோனி கேப்டனாக விளையாடிய கடைசி போட்டியாக அமைந்துவிட்டது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களால் ‘தல’ என்று அழைக்கப்படும் தோனிக்கு ஒரு தனி பெரும் ரசிகர் பட்டாளமே உண்டு. அவர் தொடர்ந்து சென்னை அணியில் தொடருவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்திருந்தாலும் அவர் கேப்டனாக இல்லாத சென்னை அணி அதே வரவேற்பை பெறுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here