தலவாக்கலை சென் என்றூஸ் தோட்டத்தில் கலாசார மண்டபமொன்றை அமைப்பதற்கு 20 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள், சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் பணிப்புரைக்கேற்ப இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்தக்கலாசார மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (20.09.0217) நடைபெற்றது. இதில் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங்.பொன்னையா உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்கள் தோட்ட பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்