கோகிலாவின் உடல் முழுவதும் தீப்பிடித்து எரிந்து உயிரிழந்த பரிதாபம்.
தமிழகத்தில் செல்போனில் சார்ஜ் போட்டபடி போன் பேசிய இளம்பெண் உயிரிழந்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை விசித்திர ராஜபுரத்தில் வசித்து வந்தவர் 32 வயதான கோகிலா.இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில் தனது 9 வயது மகன் பிரகதீஷ் உடன் தனியாக வசித்து வந்தார்.கோகிலா செல்போன் மற்றும் கடிகாரம் சரி செய்யும் கடையை நடத்தி வந்தார்.
நேற்று அவர் தனது செல்போனை சார்ஜ் போட்டபடியே அவர் அதில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென செல்போன் வெடித்து சிதறியது. இதில் கடை முழுவதும் தீப்பற்றி எறிந்ததால் கோகிலாவின் உடல் முழுவதும் தீப்பிடித்துள்ளது.இதனால் அலறித் துடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். .
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கோகிலாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
சார்ஜ் போட்டபடி செல்போனில் பேசுவது ஆபத்து என தொழில்நுட்ப வல்லுனர்கள் எச்சரிக்கும் நிலையிலும் இது போன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.