மொணராகலை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக வெஹெரகல நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் தலா ஒன்றரை அடி அகலத்தில் திறக்கப்பட்டுள்ளது.வான் கதவுகள் திறக்கப்பட்டதை அடுத்து, மெனிக் ஆற்றின் நீர்மட்டமும் வேகமாக அதிகரித்துள்ளது.இதன் காரணமாக கதிர்காமம், செல்லக்கதிர்காம பிரதேச மக்களையும், மெனிக் ஆற்றை பயன்படுத்தும் பக்தர்களையும் அவதானமாக செயல்படுமாறு மொனராகலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்தால், வெஹெரகல நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை மேலும் திறக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என மொணராகலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.