செவ்வந்தியை கண்டுபிடிக்க நாடு முழுவதும் விசேட தேடுதல் நடவடிக்கை!

0
28

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பின்னணியில் உள்ளதாகக் கருதப்படும் 25 வயது சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியைத் தேடுவதற்காக நாடு முழுவதும் விசேட தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது

குறித்த பெண் இந்த நாட்டில் தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்படி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொலைக்குப் பிறகு குறித்த சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதோடு மேலும் சில தகவல்கள் குறித்த சந்தேக நபர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இருப்பினும், அந்தப் பெண் இந்த நாட்டில் தங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், தெஹிவளை மற்றும் மதுகமவில் பல இடங்களில் நேற்று (23) விசேட தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இருப்பினும், அவர் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறான சூழ்நிலையில், கொலை மிரட்டல்கள் வந்ததாகக் கூறி, அந்தப் பெண்ணின் பாட்டி, தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் நீர்கொழும்பு வீதி, ஜெயா மாவத்தையில் உள்ள தங்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here