சேதமடைந்த பாலத்தை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை – மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன்

0
98

அண்மையில் பெய்த கடும் மழையினால் லொனெக் தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாதையின் பிரதான பாலம் சேதமடைந்துள்ளது. இதனையடுத்து பாலத்தை துரிதமாக அமைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் மேற்கொண்டுள்ளார்.வட்டவளை ஆகுரோயா பிரதான பாதையின் அகரவத்தையிலிருந்து லொனெக் தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாலம் கடந்த சில தினங்களுக்கு முன் வெள்ளத்தில் சேதமாகியது. இதனால் அப் பாலத்தை பயன்படுத்தும் அப்பகுதி மக்கள் பல சிரமங்களை எதிர்கொண்டனர்.

இது தொடர்பாக மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரனின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, குறித்த தோட்ட நிர்வாகத்திடம் கலந்துரையாடி தற்காலிகமாக பாலம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் மேற்கொண்டுள்ளார்.

தற்காலிகமாக அமைக்கும் இந்த பாலத்தை, அமைச்சர் பழனி திகாம்பரத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து நிரந்தரமான பாலம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

 

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here