மக்கள் விடுதலை முன்னனியினரால் அட்டன் மணிக்கூடு சந்தியிலே 30.08.217 இரவு 6.30 மணியளவில் இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மக்கள் விடுதலை முன்னியின் அமைப்பாளர் மஞ்சுள சுரவீர தலைமையில் இடம்பெற்ற இவ் ஆர்பாட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் மற்றும் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியர்களும் ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர்
தீ பந்தம் கையில் ஏந்திய வண்ணம் சைட்டத்திற்கு எதிராக கோசங்களை எழுப்பினர் சைட்டம் கல்லூரியை மூடக்கோரியும் இலவசக்கல்வி மற்றும் இலவச சுகாதார சேவையை இல்லாதொழிக்கும் சைட்டம் வேண்டாம் எனவும் ஆர்பாட்டகாரர்கள் கோசம் எழுப்பினர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்