சோமவன்சவின் இறுதிக்கிரியைகளில் JVP தலையிட குடும்பத்தினர் எதிர்ப்பு!

0
129

காலமான மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்கவின் இறுதிச்சடங்கில் மக்கள் விடுதலை முன்னணியின் தற்போதைய தலைவர்கள் தலையீடு செய்வதற்கு அவரின் உறவினர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

சோமவங்க உயிருடன் இருக்கும் போது மக்கள் விடுதலை முன்னணியின் தற்போதைய தலைவர்கள் அவர் தொடர்பில் வௌியிட்ட கருத்துக்கள் தொடர்பில் தாம் மனவருத்தத்தில் இருப்பதாக சோமவங்சவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் டில்வின் சில்வா , குடும்ப உறவினர்களின் விருப்பப்படி இறுதிச்சடங்கை மேற்கொள்ள தாம் ஒத்துழைப்பு வழங்க தயார் என குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை காலமான ஜே வி பியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் இறுதி சடங்குகள் எதிர்வரும் 18ம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொரலை பொது மயானத்தில் இந்த கிரியை இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here