வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் தூதரக கடமைகள் தொடர்பான கட்டணங்களை திருத்தம் செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இது தொடர்பான கட்டணங்கள் திருத்தம் செய்யப்படவுள்ளதுடன், அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.