ஜனவரி மாதம் முதல் சமுர்த்தி வேலைத்திட்டத்தின் கீழ் 16,146 பேருக்கு 2000 ரூபா கொடுப்பனவை மாவட்ட செயலாளர்கள் ஊடாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இதன்படி பிரிவெனா, சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், பராமரிப்பு இல்லங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும் அவர் குறிப்பிட்டுள்ளார்.