ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் சமூகத்தளம் ஒன்றின் ஊடாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள சுகத் குமார லக்மான, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.
தம்மை மலேசியாவில் சட்டரீதியற்ற வகையில் கைதுசெய்து தடுத்து வைத்திருந்தமைக்கு எதிராக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டை செய்த பின்னர் ஊடகங்களில் கருத்துரைத்த லக்மான, ஏப்ரல் 22 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட தம்மை ஐந்து நாட்கள் மலேசியாவில் தடுத்து வைத்திருந்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் தமது தொழிலும் இல்லாமல் போயுள்ளது. எனவே தமக்கு நீதிக்கோரியே மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததாக லக்மான குறிப்பிட்டுள்ளார்.