ஜனாதிபதிக்கு ஆதரவாக பேரணியில் கலந்து கொள்வதற்கு ரூ.5,000 தந்தார்கள். இதனால் ‘கோட்டா எமக்கு வேண்டும்’ என கோசமிட்டு பேரணியில் கலந்து கொண்டேன் என அசால்ட்டாக கூறியுள்ளார், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவாக பேரணியில் ஈடுபட்ட ஒருவர். சில நாட்களின் முன்னர் கொழும்பில் சிறிய குழுவொன்று ஜனாதிபதி கோட்டாபயவிற்கு ஆதரவாக பேரணியில் ஈடுபட்டது.