ஜனாதிபதியை பதவியில் இருந்து நீக்குவது நெருக்கடிக்கு தீர்வாகாது

0
127

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்குவது நெருக்கடிக்கு தீர்வாகாது என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ, மக்களின் பலத்த எதிர்ப்புகளை அடுத்து புதிய அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார் என கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி சர்வகட்சி மாநாட்டிற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

வீதியில் இறங்கிப் போராடும் பொதுமக்களை அமைதிப்படுத்தவே இப்போது முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும்.

இப்பிரச்சினைக்கு தீர்வு காண சரியான திட்டம் வகுக்கப்பட வேண்டும் என அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here