இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அரசாங்கத்துடன் இணைவதில் மற்றும் அதன் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அமைச்சர் பதவியொன்றை வழங்குவது தொடர்பில் எமக்கு எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. ஆனால், இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பெருந்தோட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று தேசிய தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கு ஒரு தார்மீக கடமையிருக்கின்றது. நாங்கள், கடந்த ஜனாதிபதி தேர்தலில் இருந்து, மைத்திரிபால சிறிசேனவுடன் இருக்கின்றோம்.
பெருந்தோட்டத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தியவர் என்றவகையில், தொண்டமான் மட்டுமே கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்காதவர் என்றும் அவர் குறிப்பிட்டார்.