ஜனாதிபதி, நாளைய தினமே பதவியை விட்டு வெளியேறினாலும், நாடு ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல முடியாது.
மாறாக ஜனாதிபதி ஒருவரை நாடாளுமன்றம் நியமிக்க முடியும் என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் கூட, எந்த நேரத்திலும் அரசாங்கத்தை கலைக்கும் அதிகாரம் அவருக்கு இருக்காது எனவும் மறிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எனவே, அதிகார மாற்றம் கோரி கூச்சல் போடுவதில் பயன் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மரணத்தின் பின்னர் தேர்தல் நடத்தப்படவில்லை,
ஜனாதிபதி நியமிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக, நாடாளுமன்றம் டி.பி.விஜேதுங்கவுக்கு ஆதரவாக வாக்களித்தது, இதன் பின்னரே அவர் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆட்சியைப் பிடிக்க ஒரு காலம் இருக்கிறது.
மாறாக ஆட்சியை மாற்றி புதிய ஆட்சியை கைப்பற்றுவது நடைமுறை சாத்தியம் இல்லை என்றும் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.