ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் செல்கிறார்!

0
204

இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 18ம் திகதியன்றுயாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.

இதன்போது அவரிடம் இந்திய அரசாங்கத்தினால் புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் துரையப்பாவிளையாட்டரங்கு கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அன்றைய தினம் சர்வதேச யோகா தினம் அனுஸ்டிக்கப்படுவதனை முன்னிட்டு, யோகாசிறப்பு நிகழ்வுகளிலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்கவுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுடன்யாழ்ப்பாணத்தின் நிகழ்வும் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அன்றைய தினம் வலிகாமம் வடக்கில்படையினர் வசம் இருந்த காணிகளை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வுகளில் பங்கேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here