ஜனாதிபதி ரணிலுக்கு கொழும்பு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

0
87

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான 108 வழக்குகளில் இருந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை (Ranil Wickremesinghe) விடுவிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி மகேஷ டி சில்வாவினால் இன்று (01-03-2023) இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

ஈஸ்டர் தாக்குதலின் போது கொழும்பில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தீர்ப்பை அறிவித்த நீதிபதி, இரண்டாவது பிரதிவாதியான ரணில் விக்கிரமசிங்க, இலங்கையின் ஜனாதிபதி என்ற வகையில் அரசியலமைப்பின் 35(1) வது பிரிவின்படி விடுதலைக்கு தகுதியானவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here