ஜனாதிபதி வேட்பாளர்களின் கலர் கலரான பேச்சுக்கு இனியும் ஏமாறமாட்டோம்

0
27

ஜனாதிபதி வேட்பாளர்கள் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை வருகை தந்து பொய்யான வாக்குறுதிகளை வாரி வழங்கி மக்களை இது வரை காலமும் ஏமாற்றியே வந்துள்ளனர். இந்த வருடமும் பலர் கலர் கலராக பேசி ஏமாற்ற நினைக்கின்றனர். ஆனால் இந்த முறை மக்கள் ஒரு போதும் ஏமாறமாட்டார்கள் என ப்ரொட்டெக் தொழிற்சங்கத்தின் தலைவி கருப்பையா மைதிலி தெரிவித்தார்.
இன்று ஹட்டன் ப்ரொட் தொழிற்சங்க காரியாலயத்தில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் இன்று வேட்பாளர்கள் மேடைகளில் பல்வேறு துறையினரின் பிரச்சினைகள் தொடர்பாக பேசுகின்றனர் இலங்கையில் 70 சதத்திற்கு மேலாக இருக்கின்ற முறைசாரா துறை தொடர்பாக எந்த வித கருத்தினையும் எந்த வித வேட்பாளரும் தெரிவிக்கவில்லை என்றே கூறவேண்டும்.
இவ்வாறான தொழிலாளர்கள் மலையத்திலும் இலங்கையிலும் சுமார் 70 வீதமாக காணப்படுகின்றனர் ஆனால் இவ்வாறான ஒரு துறை இருக்கின்றதா என்பது இவர்களுக்கு தெரியவில்லை.

இந்த துறை தொடர்பாக பேசாத எந்த வேட்பாளருக்கும் நாங்கள் வாக்களிக்க போவதில்லை.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பொருளாதார நெருக்கடியின் போது மூன்று பெண்கள் தான் இந்த நாட்டை காப்பாற்றியதாக தெரிவித்திருந்தார் உண்மையில் கொரானா காலத்திலும் சரி ஏனைய காலங்களிலும் வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து பெரும் எண்ணிக்கையிலான நிதியினை அனுப்பியதனால் இந்த நாடு காப்பாற்றப்பட்டது என்பதனை இந்த நாட்டு ஜனாதிபதி மறந்து விட்டார்;.

ஆகவே இந்த நாட்டில் வருகின்ற அல்லது வர இருக்கின்ற ஜனாதிபதி முறைசாரா துறையினருக்குரிய சட்டங்களை கொண்டு வந்த நடைமுறை படுத்த வேண்டும் அத்தோடு கொள்கை பிரகடணத்;தில் முறைசாரா துறை தொடர்பான பிரச்சினை உள்ளடக்கியிருக்க வேண்டும் இல்லாவிட்டால் நாம் ஒரு போதும் பொய்யான வாக்குறுதிகளுக்கு வாக்களிக்க தயார் இல்லை என அவர் N;மலும் தெரிவித்தார்.

 

மலைவாஞ்ஞன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here