ஜல்லிகட்டு போட்டிக்கு காளையை மட்டும்தான் அழைத்து செல்வாரோ …….செந்தில்? மலையகத்தில் இருந்து ஒரு மடல்!

0
127

ஊவா மாகாணத்தில் முதலமைச்சரால் அவமானபடுத்தபட்டதாக சொல்லும் அதிபர் பவானிக்கு ஓர் அனுதாபம்கூட தெரிவிக்கவில்லை மாகாண அமைச்சர் செந்தில்.உவாமாகாண முதலமைச்சர் சாமர தஸனாயக்க,மறைமுகமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.இவருடன் செந்திலுக்கும் கூட்டு.தனது சொகுசு வாழ்க்கையையும்,விட்டுவிடமுடியாத பதவியையும் கைவிட்டுவிட்டு தமக்கு வாக்களித்தமக்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் சார்பாக இவர் செயற்படுவாரா?பதவி தந்த சாமரவிற்கு எதிராக கருத்து தெரிவிப்பாரா?
எங்கிருந்தோ வந்து இங்கே இத்தனை பேர் இருக்க அடுத்த நாட்டான் ஒருவனுக்கு பதவி,பட்டம் தந்த நமது மலையக மக்களுக்கு இவர் செய்ததுதான் என்ன?
அதிபர் சொல்லுவதை நம்பமுடியாது என கூறியவர்தான் இவர்.அதி[பரும் நூறுசதவீதம் சரியான ஆள் இல்லை.தனக்கு கீழ் பணிபுரிபவர்களை எடுத்தெறிந்து பேசுவதும் ஓடஓட விரட்டுவதும் இவரின் வாடிக்கை.

தர்ம் 05ல் 84 புள்ளிகள் பெற்ற மாணவியை தவிர்த்து விட்டு,73 புள்ளிகள் பெற்ற இன்னொரு மாணவிக்கு இடம் கொடுத்ததால் தான் இப்பிரச்சினை.
இடம் கிடைக்காதவரின் பெற்றோர் ஆதங்கப்படுவதும்,எதிர்ப்பினை காட்ட முற்படுவதும் இயல்புதான்.ஆனால் இதில் வில்லங்கம் யாதெனில் இடங்கிடைக்காத மாணவியின் தந்தை சாமரவின் கட்சியில் உள்ளூராட்சி சபையில் போட்டியிடும் ஒரு வேட்பாளர்.எனவே அந்த தெனாவெட்டிலும்,முதலமைச்சர் தான் சொன்னால் எதனையும் செய்யகூடியவர் என்பதனை காட்டவும்,இவர் முயன்றுள்ளார்.தான் கல்வி கற்றவர்,முதலமைச்சர் படிக்காதவர் என அதிபர் கூறியதாக இவர் சொல்லியிருக்கிறார்.

தங்களின் சுயநல தேவைக்காக ஒரு சமூகத்தையே இவர் தவறான பாதையில் இட்டு சென்றிருக்கிறார்,பாத்திமா கல்லூரி உங்களுக்கென்று இருக்கும் போது உங்கள் பிள்ளைகளை இதில் சேர்க்காவிட்டால் தான் என்ன?தவறான சிலரின் அணுகுமுறையால் சிலரின் இயல்பு வாழ்க்கை சந்தி சிரிக்கவைக்கப்பட்டுள்ளது.
ஊவாமாகாண அமைச்சராக பரிவாரங்களுடன் பவனி வரும் செந்தில் இதில் என்ன கிழித்தார்? மலையகத்தின் ஏக தலைவன் என தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஆறுமுகன் தான் என்ன செய்தார்?யார் அந்தபொம்புள அவபோய் கும்ம்பிட்டாளா…………………… என்று கேட்டிருக்கிறார். மத்திய மாகாண தமிழ் கல்வியமைச்சர் ராமேஷ்வரன் என்ன செய்தார் அவர் பொறுப்பு வகிக்கும் துறை சார்ந்தவர்கள் பிரச்சினையில் அல்லல் பட்டுக்கொண்டிருக்கையில் அவர் கூட்டத்தோடு கும்மாளமிட்டுக்கொண்டிருக்கிறார்.

வாயை திறந்தால் ஊவாவிலும்,மத்திய மாகாணத்திலும் தங்கள் சீட்டு கிழிந்து விடும் என்ற பயம்.இவர்கள் மட்டும் தான் என்றில்லை பல தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் வாயை மூடிக்கொண்டுதான் இருக்கின்றனர்.கதிரையின் கதகதப்பு இதமாக இருப்பதால்.

ஆசிரியர்களே சிந்தியுங்கள் எல்லோருக்கும் இல்லாவிட்டாலும் சிலருக்கு சொல்லிதான் ஆகவேண்டும்,அரசியல் அடிவருடிகளுக்கு இது ஒரு பாடம், சுயமாக இருங்கள், எதிர்கால அரசியலுக்கு நல்ல பிரதிநிதிகளை உருவாக்குங்கள் , சமூகம் உங்களை நம்பிதான் இருக்கிறது .அற்ப பதவிகளுக்காகவும்,சலுகைகளுக்காகவும் விலை போகாதீர்கள்.

மலைக்கள்ளன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here