ஜான்சன் பேபி பவுடரை தினமும் உணவாக உண்ணும் இளம்பெண்

0
40

அமெரிக்காவில் இளம்பெண்ணொருவர் ஜான்சன் பேபி பவுடரை தினமும் உண்ணும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார்.27 வயதான டிரிகா மார்டின் கடந்த ஆண்டில் மட்டும் பேபி பவுடருக்காக $4,000 பணம் செலவு செய்துள்ளார்.

தோலுக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய பவுடர் என நிறுவனம் குறிப்பிட்டுள்ள போதும், அதை சாப்பிடுவதை டிரிகா தொடர்கிறார்.இந்தப் பழக்கத்தால் இதுவரையில் எந்த விதமான உடல்நல மற்றும் செரிமான பிரச்னைகளுக்கும் உள்ளாகவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

டிரிகா மேலும் கூறுகையில், “எனக்கு பேபி பவுடர் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும். ஒரு கட்டத்திற்கு மேல் பேபி பவுடரையே உணவாக உண்ணும் அளவிற்கு அடிமையாகி விட்டேன்.

நான் எங்காவது பயணம் செய்கிறேன் என்றால், நிச்சயம் எனக்கு பேபி பவுடர் தேவையாக இருக்கும்.அதற்கேற்றார் போல அதை வாங்கி வைத்துக் கொள்வேன் என கூறி திகிலூட்டுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here