ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் பஸ் கட்டணங்கள் 3.2 வீதமாக அதிகரிக்கப்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பஸ் போக்குவரத்து சங்கத்தின் பிரதிநிதிகளுடன் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் குறித்துஉறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், குறித்த பஸ் கட்டணங்கள் 3.2 வீத அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு வாய்ப்புக்கள் உள்ள இதேவேளை, 10 வீதத்திற்கு மேல் அதிகரிக்கப்படுமாயின் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.