ஜூலை மாதம் தொடக்கம் நூற்றுக்கு 15 சதவீதமாக பேரூந்து கட்டணம் அதிகரிக்கப்படாதவிடத்து, ஜூலை மாதம் 4ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் போராட்டத்தில் ஈடுபட போவதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
தற்போது 8 ரூபாவாக காணப்படும் ஆகக் குறைந்த கட்டணம் 10 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.