ஜெனீவாவில் இலங்கைக் குழுவினர் சந்திப்புக்களுக்கு தயார் நிலையில்!

0
118

ஜெனீவா சென்றுள்ள இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் குழு, இன்றைய தினம் அரச சார்பற்ற நிறுவனங்களையும், மனித உரிமைகள் ஆணையகத்தின் உறுப்பு நாடுகளையும் சந்திக்கவுள்ளது.

ஜெனீவா மனித உரிமைகள் ஆணையக கட்டிடத்தில் இந்த சந்திப்புகள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மறுசீரமைப்பு செயற்பாடுகள் மற்றும் மனித உரிமை மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹுசைன் நாளையதினம், இலங்கை தொடர்பான தமது வாய்மொழி அறிக்கையை வெளியிடவுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் இலங்கை வந்திருந்த அவர், இலங்கையில் தாம் அவதானித்த விடயங்கள் தொடர்பில் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here