பொகவந்தலாவ ஜெப்பல்டன் பூசாரி தோட்ட தேயிலை மலையில் மூன்று அடி நீலம் கொண்ட சிறுத்தையின் உடலம் ஒன்று 03.06.2018 ஞாயிற்றுகிழமை காலை 10மணி அளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ காவல்துறையினர் தெரிவித்தனர்.பொகவந்தலாவ ஜெப்பல்டன் பூசாரி தோட்டமக்கள் 11ம் இலக்க மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த தேயிலைமலையில் நாய்யுடன் சண்டை பிடித்து கொண்டிருந்த சிறுத்தை புலி வங்கி ஒன்றில் இருந்து கீழே விழுந்துள்ளதாகவும் விழுந்தவுடன் சிறுத்தை புலிக்கு தலைபகுதி அடிபட்டத்தில் மயக்கமடைந்து விழுந்து கிடந்தாக குறித்த தோட்டமக்கள் பொகவந்தலாவ பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இதேவேலை குறித்த சிறுத்தை புலியோடு சண்டையிட்ட நாய்க்கு கழுத்து பகுதியில் காயங்கள் காணபடுவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேலை சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொகவந்தலாவ பொலிஸார் சிறுத்தை புலியின் உடலம் தொடர்பாக நல்லதண்ணி வனவிலங்கு காரியால அதிகாரிகளுக்கு அறிவிக்கபட்டுள்ளதாகவும் சிறுத்தையின் உடலம் பிரேத பரீசோதனைக்கு அனுப்பி வைக்கப்படஉள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த சிறுத்தை புலியின் மரணம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸாரும் வனவிலங்கு காரியாலய அதிகாரிகளும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)