ஜெர்மனியில் திரையரங்கில் பொதுமக்களை சிறைப் பிடிக்க முயன்றவன் சுட்டுக் கொலை!

0
191

பெர்லின் – ஜெர்மனில் பிராங்பர்ட் அருகே உள்ள வியர்ன்ஹெய்ம் என்ற பகுதியில் இருந்த திரையரங்கு வளாகத்தில், நேற்று வியாழக்கிழமை மதியம் முகமூடி அணிந்த ஆயுதமேந்திர ஒருவன்,  துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தச் சம்பவத்தில் சுமார் 20 முதல் 50 பேர் வரையில் காயமடைந்திருப்பதாகவும் ஜெர்மன் ஊடகங்கள் கூறுகின்றன.

எனினும், அவர்கள் அவனது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார்களா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

இந்நிலையில், திரையரங்கு வளாகத்தில் அங்கிருந்த பார்வையாளர்களை சிறைப் பிடிக்க நினைத்த அவனது செயல்பாடு தோல்வியில் முடிந்து, ஜெர்மன் காவல்துறை அவனைச் சுட்டுக் கொன்று விட்டதாகவும் பிபிசி உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here