ஜேர்மன் தாக்குதல் ; இலங்கையர் குறித்து உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரை இல்லை!

0
106

தெற்கு ஜேர்மன் நகரான மியூனிக்கில் உள்ள வணிக வளாகத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையென தகவல்கள் மூலம் அறியக்கிடைப்பினும், இது தொடர்பில் இராஜதந்திர ரீதியில் தொடர்ந்தும் பரிசீலனை செய்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இத்தாக்குதலில் 9 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.

ஜேர்மன், ஈரான் ஆகிய நாடுகளுக்கான இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றுள்ள ஒருவரே இந்த தாக்குதலை நடாத்தியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here