நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்வதற்கு பகிரங்க பிடியாணையை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
கடந்த மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரம் தொடர்பில் தம்மை கைது செய்வதை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றில் நீதிப்பேராணையை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.