ஞானசாரரின் இனவாதப் போக்கை சாதுரியமாக கையாண்டார் அமைச்சர் மனோ திகாம்பரம் பாராட்டு!

0
151

இனவாதம் என்பது இலங்கை நாட்டுக்கு புதிதல்ல. காலத்திற்கு காலம் வௌ;வேறு வடிவங்களில் அது இடம்பெற்றே வந்துள்ளது. அண்மைய ஆண்டுகளில் அதனை முன்னெடுத்துச் செல்லும் குழுவாக கலகொட அத்தே ஞானசார தேரோ எனும் பிக்கு தலைமையிலான குழுவினர் இயங்குகின்றனர். இது தனியே அவர் தலைமையிலான குழுவினரின் வேலை மாத்திரம் கிடையாது. இதற்கு பின்னால் ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலும் இனவாத அரசியல்வாதிகளும் கூட இருக்கின்றார்கள். அத்தகைய அரசியல் நிகழ்ச்சி நிரல் கொண்ட ஞானசாரதேரர் தம்மைச் சந்திக்க வந்த வேளை அரசியல்வாதி என்கின்ற அடிப்படையில் சாணக்கியமாகவும் சாதுரியமாகவும் தமிழ் முற்கோக்குகூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் அதனை கையாண்டமை பாராட்டுக்குரியது என மலைநாட்டு பதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

பொதுபலசேன இயக்கத்தின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான குழுவினர் அமைச்சார் மனோ கணேசனின் அமைச்சுக்கு சென்று நடந்துகொண்ட விதம் குறித்து பல்வேறு கருத்துக்கள் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அமைச்சர் திகாம்பரத்திடம் கருத்துக் கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கையில் இனவாதிகள் மதவாதிகள் எல்லா தரப்பிலும் உள்ளனர். குறிப்பாக பௌத்தம் எனும் போர்வையில் இலங்கை பௌத்த நாடு எனும் ஆதிக்க சிந்தனையில் பல பிக்குமார் இதற்கு முன்னர் இந்த நாட்டில் செயற்பட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர். டி.பண்டாரநாயக்க அவர்களை கொலை செய்ததே ஒரு பௌத்த பிக்கு என்பதை நாம் மறந்துவிடமுடியாது. அபோல கடந்த ஆட்சியில் தங்களது கருத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த பௌத்த துறவி ஒருவரை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது அமைச்சில் மறைத்து வைத்துள்ளார் என கூறி பொதுபலசேன மற்றும் ராவண பலய அமைப்பினர் அவரது அமைச்சுக்குள் புகுந்து செய்த அத்து மீறல்களையும் நாம் மறந்துவிட முடியாது.

இத்தகையதொரு பின்னணியில் இனவாத கண்ணோட்டத்;தோடும் இனவாத அரசியல் சக்திகளின் பின்புலத்தோடும் அமைச்சுக்கு வந்த சண்டித்தனம் காட்டலாம் என நினைத்து வந்த கலகொட அத்தே ஞானசார தேரரை அமரவைத்து அவரது இனவாதத்தை கக்கவைத்து அவற்றுக்கு பொருத்தமாக பதிலுரைத்து சாணக்கியமாக நடந்துகொண்ட அமைச்சர் மனோகணேசனின் நடவடிக்கைகளை பாராட்ட வேண்டும். அரசியல் தலைமை எனும்போது எந்தவொரு விடயத்தையும் பக்குவத்துடன் கையாளவேண்டும்.

ஞானசார தேரருடன் அமைச்சர் மனோ கணேசன் மல்லுக்கட்டியிருக்க வேண்டும் என்பதைப் போலவும் சில ஊடகங்கள் கருத்து பகிர்ந்திருக்கின்றன. ஆனால் பக்குவம் என்பது எதிரியின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது அல்ல. அதனை சாதுரியமாக எதிர்கொள்வது. அதனையே அமைச்சர் மனோ கணேசன் செய்துள்ளார். அவர் மகாவம்சத்தின் வரலாற்று விடயங்களை தொட்டுக்காட்டி விளக்கியபோது மகாவம்சத்தையே பிழையென ஞானசார தேரர் சொல்லியதன் மூலம் தனது இனவாத நிகழ்ச்சி நிரலுக்கு அவர் எந்த உத்தியையையும் கையாள்வார் என்பது வெளிப்படுகிறது.

நாம் தான் அவரைக் கவனமாக கையாளவேண்டும் என்பதை அமைச்சர் மனோவின் செயற்பாடுகள் எடுத்துக்காட்டியள்ளன. தவிரவும் சிங்கள பௌத்த இனவாதியான ஞானசார தேரோ முஸ்லிம்களை எதிர்ப்பதற்காக பிரபாகரனை நல்லவர் என சொல்வதையும் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த விடயங்கள் பொதுபலசேனவின் சந்தர்ப்பவாத அரசியல் செயற்பாடுகளை அம்பலப்படுத்துவனவாக உள்ளன. உண்மையில் இத்தகைய முகத்திரை கிழிப்புகள் மூலம் வறட்டத்தனமாக பொதுபலசேனவை ஆதரிக்க முற்படும் பௌத்த அடிப்படைவாதிகளும் அந்த அமைப்பின் மீது நம்பிக்கை இழந்து அந்த அமைப்பு பலவீனமடையும் சாத்தியமே அதிகம். அதற்கான வாய்ப்பினை உருவாக்கிய அமைச்சர் மனோகணேசனின் சாதுரியமான செயற்பாட்டை தமிழ் முற்போக்கு கூட்டணியின் இணைத்தலைவர் என்றவகையில் பாராட்டுகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here