பொதுபலசேன அமைப்பின் தலைவர் ஞானசாரர் தேரரின் கைதை கண்டித்தும் சிறைசாலையில் தேரரின் காவியுடை கழட்டியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அட்டனில் கருப்புகொடி ஏந்தி பாதையாத்திரையொன்று 21.06.2018 மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றது .
அட்டன் நகர பௌத்தர்களின் ஏற்பாட்டில் அட்டன் மல்லிகைப்பூ சந்தி சமன் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகிய எதிர்ப்பு நடைபயணமானது அட்டன் நீக்ரோதம விகாரை வரை சென்றடைந்தது.
சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் காவியுடை கழட்டப்பட்டு சிறைச்சாலை சீருடை அணிவித்தமையை கண்டிப்பதாகவும் கைது செய்யப்பட்ட தேரரை விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்