கடந்த பல வாரங்களாக ஊடகங்களில் இனவாத கதாநாயகனாக வலம் வந்த பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைதசெய்யப்படவுள்ளதாக பொலிஸ் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதுடன்,அச்சுறுத்தல் விடுத்தமை,இனங்களுக்கிடையே கலகத்தை உண்டு பண்ணும் வகையில் செயற்படுகின்றiமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டு இவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளதால் இவரை கைது செய்யும் நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞானசாரரை கைத செய்வதற்காக பல பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன்,அவர் நாட்டை விட்டு வெளியேறுவதை தடுக்கும் வகையில் புதுக்கடை இலக்கம் 4 நீதிமன்றில் உத்தரவு பிறப்பிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஞானசாரருக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைபாடுகளை விசாரிக்க குற்றப்புலனாய்வு பிரிவினர் இவரை அழைத்திருந்த போதும், அவர் அதை தட்டிக்கழித்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
நன்றி live360news