ஞானசார தேரருக்கு பிணை

0
34

நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரரை பிணையில் விடுவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஞானசார தேரர் சமர்ப்பித்த சீராய்வு மனுவை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மேலும் அவருக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத்திற்கான தடை தொடர்ந்தும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கூரகல விகாரை தொடர்பான செய்தியாளர் சந்திப்பின் போது இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டு மத நல்லிணக்கத்தை குலைத்த குற்றச்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் நாயகம் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் தண்டப்பணமும் விதிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு மார்ச் 28ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here