டயகம வெஸ்ட்மூன்றாம் பிரிவு கிராம உத்தியோகஸ்தர்களுக்கான அலுவலகம் அமைப்பதற்கு நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற் உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் பதினைந்து இலட்சம் பண்முகபடுத்தபட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் முத்துசிவலிங்கம் மத்திய மாகாண உறுப்பினர் ஏ.பி சத்திவேல் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜதுரை உட்பட பலரும் கலந்துகொண்டனர்.