இப்பாடசாலை அதிபர் இன்னும் இடமாற்றம் செய்யவில்லை இப்பாடசாலையில் தொடர்ந்து பணியாற்றிவருகின்றார்.
இப்பாடசாலை அமைந்துள்ள இடத்திற்கும் குறித்த கடைக்கும் இருநூறு மீட்டர் தூரமாகும்
இரண்டுக்கும் இடையில் டயகம நகரத்திற்கு செல்லும் பிரதான பாதை செல்கின்றது பாடசாலை மாணவர்களின் நலன் கருதி அப்பாதையில் பாதுகாப்புக்காக பொலிஸ் அதிகாரிகள் அமர்த்தப்பட்டுள்ளனர்.
குறித்த கடையில் ஜஸ்கிரிம் விற்பனை செய்யப்படுகின்றது அடிக்கடி மாணவர்கள் கடைக்குசென்று ஜஸகிரிம்; வாங்கிவருவதுடன் இதனை சாப்பிட்டுவிட்டு பொலித்தீன்களை பாடசாலை பகுதியில் போடப்படுவதால் சூழல் அசுத்தமாகுவதன் காரணமாக உப அதிபர் மாணவர்களிடம் பாடசாலை நேரத்தில் அப்பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சென்று பொலித்தீனால் அடைக்கப்பட்ட உணவு பொருட்களை வாங்கவேண்டாம் எனவும் அப்படி வாங்குவதாக இருந்தால் பாடசாலை விட்டு வீட்டுக்கு சென்ற பின் வாங்குமாறு உப அதிபரால் மாணவர்களிடம் பாடசாலையில் நடைபெற்ற கூட்டத்தில் கடந்த 10 திகதி அறிவிக்கப்பட்டுள்ளார்.
11 ம் திகதி அன்று பாடசாலை முடித்துவிட்டு ஆசிரியர்கள் அதிபர் உள்ளிட்ட இவர்கள வீட்டுக்கு; செல்லும் வழியில் குறித்த கடையில் உள்ள நபர்கள் தகாத வாரத்தைகளால் பேசியதாகவும் இதனை தொடர்ந்து அடுத்த நாள்,
12 ம் திகதி அன்று டயகம பொலிஸ் நிலையத்தில் பாடசாலை நிர்வாகத்தால் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸ் அதிகாரி மூலம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு கடை உரிமையாளர்க்கு பொலிஸ் அதிகாரியால் பாடசாலை அதிபர் ஆசிரியர்களிடம் தேவையற்ற முறையில் பிரச்சனை ஏற்படுத்தவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர் எனவும் தெரிய வருகிறது.
மேற்படி பாடசாலையின் அதிபர் மற்றும் அவர்களின் தொலைபேசி இலக்கங்கள் கருடனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பிழையான தகவல்கள் சரியாக்கப்பட்டால் இந்த குழப்பங்கள் சரியாகும் அதனை கருடன்” வரவேற்கிறது.