டிக்கோயா இன்வெறி தோட்ட சிறுவனின் மரணம் தலைநகரில் மலையக இளைஞர்களுக்கு தொழில் பாதுகாப்பும் உயிர் உத்தரவாதமும் இல்லை! : கணபதி கனகராஜ்

0
128

கொழும்பில் தொழில் செய்த இடத்தில் மரணமடைந்த டிக்கோயா மணிக்கவத்தை தோட்டத்தை சேர்ந்த பத்மநாதன் அஜித்குமார் என்ற சிறுவனின் மரணம் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொண்டு உண்மையை கண்டறிய வேண்டும் என மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் கோரிக்கைவிடுத்துள்ளார்.

பல்வேறு ஆசைவார்த்தைகளை காட்டி வேலைக்கு ஆள்பிடிக்கும் தரகர்களால் மலையக இனைஞர்களும் அவர்களின் பெற்றோர்களும் ஏமாற்றப்பட்டு தொழில் பாதுகாப்பில்லாத இடங்களில் வேலைக்கமர்த்தப்படுகின்றனர்.

இவ்வாறு கொழும்புக்கு அழைத்து செல்லப்படும் இளைஞர்கள்அதிக வேலைப்பழுவுடன், பெரும் மன அழுத்தங்களுக்கு உள்ளாகின்றனர். இவர்கள் விடயத்தில் தொழிற்சட்டங்களை எவறும் பின்பற்றுவதில்லை.

தலைநகரில் தொழில்புரியும் மலையகத்தை சேர்ந்த பலர் பல்வேறு அடக்குமுறைகளுக்கு உள்ளாகிவருகின்றனர். வேலைத்தளங்களில் முரண்பாடுகள் ஏற்படுகின்ற போது வேலை வழங்குபவர்கள் வேலைசெய்வோர் மீதே குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அச்சுறுத்தப்படுகின்றனர், திருடர்களாக சித்தரித்து தமக்கெதிரான குற்றச்சாட்டுகளில் இருந்து தப்பித்துக்கொள்கின்றனர்.

கடந்த காலங்களில் கொழும்பில் வேலைசெய்யும் இடங்களில் மலையக இளைஞர்களுக்கு ஏற்பட்ட பல பிரச்சினைகளுக்கு நீதி கிடைக்கவில்லை.

வேலைகொள்வோர் தமது பணபலத்தின் மூலம் சட்டத்தை கையிலெடுத்த சம்பவங்களும் இருக்கின்றன. அஜித்குமாரின் என்ற 17 வயது சிறுவனின் மரணம் தொடர்பாக அவருடைய உறவினர்களின் நியாயமான சந்தேகத்தை தீர்ப்பதற்கு பொலீசார் அவர்களிடம் முறைப்பாட்டை பெற்று விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

எமக்கு சரியான நியாயம் கிடைக்காத பட்சத்தில் இந்த விடயத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் ஊடாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுசெல்வோம்.

மலையகத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்களின் பாதுகாப்பு மற்றும் தொழில் உரிமைகள் தொடர்பாக எதிர்காலத்தில் மிகுந்த கவனத்தை செலுத்தவேண்டியுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் புதிய விதிமுறைகளை உறுவாக்கி தொழில் அமைச்சினூடாக செயற்படுத்தும் வேலைத்திட்டமொன்றை தயாரித்துவருகின்றது எனவும் மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவத்துள்ளார்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here