டிக்கோயா நிவ்வெளி தொழிற்பயிற்சி நிலையத்தின் பயிற்சியில் ஈடுபட்ட 06மணவர்கள் திடிரென வைத்தியசாலையில் அனுமதி.
நோர்வூட் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா நிவ்வெளி பகுதியில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வந்த ஆறு மாணவர்கள் திடிரென டிக்கோயா கிழங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் 06.03.2018.செவ்வாய் கிழமை காலை 09.30 மணி அளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.
குறித்த நிவ்வெளி தொழிநுற்ப பியிற்சிநிலையத்தின் வளாகத்தில் யூரியா என கூறபடுகின்ற பசலை வகைகளை குறித்த தோட்டமக்கள் கொண்டுவந்து கொட்டியமைக்கான காரணத்தினாலேயே தொழிநுற்ப பயிற்சிநிலையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் அரிப்புதன்மை கண்வழியும் ஏற்பட்டமையின் காரணமாக தொழிற்நுற்ப பயிற்சி நிலையத்தில் பயிற்சில் ஈடுபட்டுவந்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பில் 12மாணவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற போது இதில் ஆறு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதோடு ஏனையோர் வெளிநோயாளர் பிரிவில் மருந்தினை பெற்று கொண்டு வீடு திரும்பி உள்ளதாக தொழிற்பயிற்சின் அதிபர் திருமதி .சந்ராகுமாரி பெல்ஜிமன் தெரிவித்தார்.
எங்களுடை தொழிற்பயிற்சி நிலையம் நடாத்திவரும் இடத்தில் பசலை வகைகளை கொண்டு வந்து எங்கள் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு சொந்தமான இடத்தில் எங்களின் அனுமதியை பெறாமல் கொண்டு வந்து கொட்டுவதாக தெரிவித்தார்.
இது தொடர்பில் நோர்வூட் தோட்ட உதவி முகாமையாளர் கூறுகையில் தற்பொழுது இயங்குகின்ற தொழிற்பயிற்சி நிலையமானது பொகவந்தலாவ தேயிலை பயிர்செய்கை கம்பனிக்கு சொந்தமானது. இந்த கட்டிடத்தில் மூன்றாவது மாடி கட்டிடத்தினை ஒப்பந்த்த்தின் அடிப்படையில் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு வழங்கபட்டுள்ளதுடன் கீழ் மாடியினை தோட்ட நிர்வாக களஞ்சியசாலையாக பயன்படுத்தி வந்ததாகவும் அதில் பசலை வகைகளை கொண்டு வந்து களஞ்சியபடுத்தி வைத்திருப்பதாக நோர்வூட் தோட்டமுகாமையாளர் ருக்க்ஷான் பத்மகுல சூரிய தெரிவித்தார்
(பொவகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்)