அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நோர்வூட் பிரதான வீதியில் டிக்கோயா நகரத்திற்கு அண்மித்த பகுதியில் 22.01.2018 அன்று அதிகாலை 5 மணியளவில் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் சாரதியும், உதவியாளரும் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
மஹியங்கனை பகுதியிலிருந்து நோர்வூட் பகுதிக்கு மணல் ஏற்றிச் சென்று இறக்கி விட்டு மீண்டும் மஹியங்கனை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
லொறியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)