டிக்கோயா பீரட் வைத்தியசாலை பாதையைச் செப்பனிடுவதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு!!

0
136

டிக்கோயா பீரட் வைத்தியசாலை பாதையைச் செப்பனிடுவதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு 02.03.2018 அன்று இடம்பெற்றது.மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கேற்ப இந்த வைத்தியசாலை பாதையைச் செப்பனிடுவதற்கு 51 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் கண்காணிப்பின் கீழ் இந்த பாதையை செப்பனிடுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

DSC02911 DSC02981 DSC02949 DSC02916

02.03.2018 அன்று இடம்பெற்ற இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிநிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ், மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், சிங்.பொன்னையா, சரஸ்வதி சிவகுரு, எம்.ராம், ராஜாராம், ட்ரஸ்ட் நிறுவனத்தலைவர் வி.புத்திரசிகாமணி உட்பட தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், ட்ரஸ்ட் நிறுவன அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here