டிக்கோயா போடைஸ் கிராமத்துகான புதிய தனி வீட்டுத்திட்டத்திற்கு அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களினால் 50 வீடுகளுக்கான நிதி செய்யபட்டுள்ளது.
இதற்கான முதற்கட்டமாக பயணாளிகளின் ஒன்று கூடல் தொ.தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவரும் நோர்வூட் பிரதேச சபை உறுப்பினருமான பா.சிவநேசன் தலைமையில் நேற்று போடைஸ் தோட்ட வைத்தியசாலை மண்டபத்தில் நடைபெற்றது
இந்திய வீடமைப்பு திட்டத்தினூடாக நிர்மாணிக்கப்படவுள்ள மேற்படி வீட்டுத்திட்டமானது தலா 10லட்சம் ரூபா செலவில் 05 கோடி நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ளது.
ஒன்று கூடலில் தோட்ட அதிகாரி மற்றும் ரெட்குரஸ் முக்கியஸ்தர்கள் கலந்து இந்த வீடமைப்பினை மிக சிறப்பாக செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் வீட்டுதிட்டத்தினை தமக்கு வழங்கிய அமைச்சருக்கு நன்றியும் கூறுவதாகவும் பயனாளிகள் தெரிவித்தனர்.
மு.இராமச்சந்திரன்