பி.எம்.எஸ் மற்றும் சோபாஸ் இணைந்து நடத்திய மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டியில் மெக்னாஸ் லோட்டஸ் விளையாட்டு கழகம் முதலாவது வெற்றிகிண்ணத்தை தனதாக்கி கொண்டது.கடந்த 09.10.11. ம் திகதிகளில் டிக்கோயா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மென்பந்து கிரிகெட் சுற்று போட்டியில் நுவரெலிய மாவட்டத்திலிருந்து 50 மேற்பட்ட அணிகள் பங்குகொண்டு போட்டியிட்டதில் இறுதி சுற்றில் மெக்காஸ் லோட்டஸ் அணி முதலாம் இடத்தையும் சென்எலியாஸ்வெளிஓயா அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுகொண்டது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு டிக்கோயா தோட்ட முகாமையாளர் மிஹிராஜ்சமரவீர மற்றும் டிக்கோயா தேயிலை தொழிற்சாலை அதிகாரி அருனாசலம் தேவசகாயம் ஆகியோர் வெற்றிக்கிண்ணங்களை வழங்கிவைப்பதையும் விளையாட்டு ஏற்பாட்டு குழு மற்றும் விளையாட்டு அணிகளையும் படங்களில் காணலாம்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்