டிக்கோயா ஹொன்சி தோட்டத்தில் இரண்டு கோடி ரூபாய் நிதியில் புதிய கிராமம்!

0
161

டிக்கோயா ஹொன்சி தோட்டத்தில் இரண்டு கோடி ரூபாய் நிதியில் புதிய கிராமம் : அமைச்சர் திகா நிதியொதுக்கீடு

மலையக புதிய கிராமங்கள் , உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் 2 கோடி ரூபாய் நிதியொதுக்கீட்டில் டிக்கோயா ஹொன்சி தோட்டத்தில் 20 தனி வீடுகள் கொண்ட கிராமம் ஒன்று ஏற்படுத்தப்படவுள்ளது.

இந்த வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு எதிர்வரும் 28 ஆம் திகதி பிற்பகல் 1 மணிக்கு இடம் பெறவுள்ளது.
தொழிலாளர் தேசிய சங்கத்தின் புளியாவத்தை அமைப்பாளர் வி.கேசவன் ஏற்பாட்டில் இடம் பெறவுள்ள இந்த நிகழ்வில் அமைச்சர் பழனி திகாம்பரம் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ள அதேவேளை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் அமைச்சர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் , மாகாணசபை உறுப்பினர்கள் , முக்கியஸ்தர்கள் ,அமைப்பாளர்கள் , இணைப்பாளர்கள் , ட்ரஸ்ட் நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர் என்று மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here