அட்டன் நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டின்சின் நகரத்தில் இருந்து சிங்காரவத்தை தோட்டத்தின் ஊடாக ரொக்பில் தோட்டத்திற்கு செல்லும் ஆறு கிலோமீட்டர் தூரம் கொண்ட பிரதான வீதி பல வருடங்களாக புனரமைப்பு செய்யப்படாது குன்றும் குழியுமாக இருப்பதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த பாதையில் குழி எது என்று தெரியாத அளவிற்கு வீதி மோசமடைந்து காணப்படுகின்றன. பாதை சீர்கேட்டினால் குழந்தை ஒன்றும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்த துர்பாக்கிய சம்பவம் ஒன்றும் குறித்த வீதியில் இடம்பெற்றுள்ளதாக இத்தோட்ட பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த பாதையில் தார் மற்றும் கொங்ககிறீட் காபட் போன்றவற்றிக்கு பதிலாக் கற்பாறைகள் தான் காட்சி அளிக்கின்றன.
வாகனங்கள் செல்ல முடியாததால் பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.வாகன வசதிகள் இல்லாத காரணத்தினால் இங்கு வாழும் மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
மழைக்காலங்களில் இப்பாதையில் நடந்து கூட செல்ல முடியாத நிலை காணப்படுகின்றன.
இதேவேளை இத்தோட்டத்தில் உள்ள நபர் ஒருவர் பல இலட்சம் ரூபா செலவு செய்து வாங்கிய வேன் ஒன்று பாதை மோசமாக இருப்பதால்.வாகனத்தை செலுத்த முடியாத நிலையில் வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கபட்டுள்ளது.
இதே வேளை இத்தோட்டத்தில் 200 குடும்பங்களைச் சார்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வந்தாலும் இம்மக்கள் பல்வேறு அடிப்படை வசதிகள் அற்ற முறையிலேயே வாழந்து வருகின்றனர்.
இம் மக்களுக்கென்று சுத்தமான குடிநீர் கிடையாது குடி இருப்பு வசதிழகள் கிடையாது. சிறுவர்களுக்கு விளையாடுவதற்கு விளையாட்டு மைதானம் கிடையாது. சமூர்த்தி திட்டம் கிடைக்காத உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் மக்கள் வாழ்ந்து வருகின்றமை காணப்படுவதுடன் மண் சரிவு அபாயமும் காணப்படுகின்றன.
அத்தோடு 50-க்கும் மேற்பட்டவர்கள் தற்காலிக கூடாரங்களில் வசித்து வருகின்றமை சுற்றி காட்டப்பட வேண்டிய விடயமாகும்.
தேர்தல் காலத்தில் மாத்திரம் அரசியல்வாதிகள் தங்களுடைய வாகனங்களில் பவனியாக வந்து வாக்குகளை பெற்றுக்கொண்டு செல்வதாகவும் அதன் பின் எவரும் தாம் எதிர்நோக்கும். பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுத்தர அரசியல்வாதிகள் முன் வருவதில்லையென இங்குள்ள மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்;.
எனவே மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெற்றுத்தருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மலைவாஞ்ஞன்