பொகவந்தலாவ டின்சின் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்த கொண்டிருந்த 17 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டக்கு இலக்காகி பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர் .
இந்த சம்பவம் 26.03.2018.திங்கள் கிழமை காலை 09மணி அளவில் இந்த பெண் தொழிலாளாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியதாக தெரிவிக்கபடுகிறது.
பொகவந்தலாவ டின்சின் தோட்டத்தில் 09ம் இலக்க தேயிலை மலையின் அடிவாரத்தில் இருந்த குளவி கூடு கலைந்ததன் காரனமாகவே இந்த தொழிலாளர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பாதிக்கபட்ட தொழிலளர்கள் மேலும் தெரிவித்தனர் .
குறித்த 17பெண் தொழிலாளர்களும் பொகவந்தலாவ தோட்டவைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின் மேலதிக சிகிச்சைக்காக இவர்கள் பொகவந்தலாவ பிரதேசவைத்தியசாலைக்கு மாற்றபட்டுள்ளதுடன் காயங்களுக்கு உள்ளான பெண் தொழிலாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் காயமடைந்தவர்கள் குறித்து கவலை பட தேவையில்லையென பொகவந்தலாவ வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார் .
எனவே பொகவந்தலாவ பிரதேசத்திலே அதிகமாக குளவி கொட்டுக்கு தோட்ட தொழிலாளர்கள் உள்ளாகிய சம்பவம் பதிவாகியிருக்கின்றமை குறிப்பிடதக்கது.
(பொகவந்தலாவ நிருபர். எஸ்.சதீஸ்)