டிப்ளோமா படித்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலில் சேர்க்கப்பட மாட்டார்கள்

0
32

டிப்ளோமா படித்தவர்கள் எதிர்காலத்தில் ஆசிரியர் தொழிலில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் அனைத்துக் கல்லூரிகளும் ஒரே பல்கலைக்கழகமாக இணைக்கப்படும் என்றும், 2028ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆசிரியர்களாக நியமிக்கப்படுபவர்கள் இளநிலைக் கல்விப் பட்டதாரிகளாக இருப்பார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வேகமாக மாறிவரும் அறிவுக்கு ஏற்ப, ஆசிரியர்கள், மருத்துவர்கள் என ஒவ்வொரு தொழில் வல்லுநர்களும் தங்கள் அறிவைப் புதுப்பிக்க வேண்டும்.

இதற்கிடையில், ஆரம்பக் கல்வியின் அடிப்படையான அழகியல் பாடத்தை ஒருபோதும் பாடத்திட்டத்தில் இருந்து நீக்க முடியாது என்று அமைச்சர் கூறுகிறார்.

மேலும், செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழிநுட்பம் ஆகிய பாடங்களை இணைத்து பாடசாலை பாடத்திட்டம் ஆக்கப்பூர்வமாக சர்வதேச தர கல்விக்கு உயர்த்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிடுகிறார்.

அதன்படி, 100 பாடசாலைகளில் முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டு, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து அந்த ஆசிரியர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற உரிமம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here