சுற்றுலா பிரதேசமாக காட்சியளிக்கும் டெவன் மற்றும் சென்கிளயார் பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலாபயணிகள் குப்பைகளை விட்டு செல்வதினால் டெவன் மற்றும் சென்கிளயார் பகுதிகள் மாசடைந்து காணபடுவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.குறித்த இந்த பகுதியில் அழகுபொருந்திய இயற்க்கை நீர்வீழ்ச்சி இரண்டு காணபடுகின்றமையால் இந்த டெவன் மற்றும் சென்கிளயார் நீர் விழ்ச்சியினை பார்க்கவருகின்ற சுற்றுலா பயணிகளே இந்த கழிவு பொருட்களை அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் ஓரமாக விட்டு செல்வதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர் .
இந்த நீர்விழ்ச்சியினை பார்வையிடுவதற்காக இலங்கையின் பலபாகங்களில் இருந்தும் வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வருகை தர கூடிய ஒரு சிறந்த பிரதேசமாக இந்த டெவன் மற்றும் சென்கிளயார் நீர் வீழ்ச்சி அமைந்து இருக்கின்ற பிரதேசம் பிரபல்யமாகியிருக்கிறது.
மலையகத்தில் இது போன்ற அழகு பொறுந்திய பிரதேசத்திற்கு வருகின்ற சுற்றுலா பயணிகள் இந்த குறித்த பகுதியில் கழிவு பொருட்களை விட்டு செல்வதை தடை செய்யுமாறு இதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளபட வேண்டுமெனவும் பிரதேசமக்கள் கோறிக்கை விடுக்கின்றனர்.
மக்களின் கோறிக்கைகள் மற்றும் குற்றச்சாற்று குறித்து தலவாகலை லிந்துளை நகரசபையின் தவிசாளர் அசோக்கசேபாலவிடம் தொடர்பு கொண்டு வினவியபோது
கடந்த காலங்களில் இந்ந உள்ளுராட்சி சபை முறையாக இயங்காத படியினால் அதற்க்கு தலைவர் மற்றும் உபதலைவர்கள் இருக்காத காரணத்தினால் இந்தகழிவுகளை இந்த மக்கள் முறையாக சேர்த்து பிரதேசசபைக்கோ நகரசபைக்கோ வழங்வில்லை.
இங்கு இவர்களால் சேகரிக்கபடுகின்ற கழிவுகளை அட்டன் நுவரெலியா பிரதான வீதி அல்லது இந்த டெவன் நீர் வீழ்ச்சி மற்றும் சென்கிளயார் நீர்விழ்ச்சி பெருக்கெடுத்து செல்லுகின்ற ஆற்று பகுதியில் விசுவதற்கு இம் மக்கள் பலக்கபட்டுள்ளார்கள் எனவே தற்பொழு இந்த புதிய உள்ளுராட்சி சபையிலே புதிய தலைவர் மற்றும் உபதலைவர் இருகின்றனர்.
எனவே இனிவரும் காலங்களில் இது போல் இந்த அழகு பொறுந்திய சுற்றுலா பிரதேசமாக காணபடுகின்ற டெவன் மற்றும் சென்கிளயார் பகுதிகளில் கழிவுகளை கொண்டு வந்து கொண்டுகின்றவர்களுக்கு எதிராக தலவாகலை லிந்துளை நகசபையின் ஊடாக சட்டநடவடிக்கை எடுக்கபடுமென அதன் தலைவர் அசோக்கசேபால மேலும் தெரிவித்தார்.
(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)