டெஸ்போட்- கிரிமெட்டிய பஸ் சேவை நேர அட்டவணை நீதிமன்றத்தால் மாற்றம்!

0
131

குறுக்குப்பாதையில் பேருந்து செல்வதை குறைத்து, டெஸ்போட் கிரிமெட்டிய வழியாக செல்வதற்கு புதிதாக நேர அட்டவணை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.
நுவரெலியா ஹட்டன் பிரதான பாதையில் நானுஓயா ரதல்ல குறுக்குப் பாதையை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் அநேகமாக பயன்படுத்துவதால் டெஸ்போட் கிரிமெட்டிய வழியாக பொதுப் (பேருந்து) போக்குவரத்து முறையாக இடம்பெறுவதில்லை.
இந்த விடயம் தொடர்பாக ஊடகத்திலும் பல தடவைகள் சுட்டிக்காட்டியதும் குறிப்பிடத்தக்கது. ஆனாலும் குறுக்குப் பாதையில் பஸ்சேவைகளை அதிகரித்தார்கள் ஆனால் குறைக்கவில்லை. இந்த விடயம் தொடர்பாக டெஸ்போட் பாரதி அபிவிருத்தி சங்கம் பல தடவை பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டத்திலும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் முன்வைத்தபோதும் எந்தவித தீர்வூம் கிடைக்கவில்லை.

கடந்த ஒருவருட காலமாக நானுஓயா பொலிஸாரினால் நுவரெலியா நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

20170830_131521

கடந்த வழக்கு விசாரணையின்போது சிரேஷ்ட சட்டதரணி ஆதவன் டெஸ்போட் கிரிமெட்டிய வழியாக வசிக்கும் பொதுமக்கள் தங்களது அசௌகரியங்களை நீதிமன்றத்தில் முன்வைத்தபின் புதிதாக நேர அட்டவணை தயார் செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் இடம்பெற்ற நுவரெலியா பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகணம் திலகராஜ், ம.மா.உ. பீ. சக்திவேல்இ பியசிரி ஆகியோர் முன்னிலையில் நேர அட்டவணை செய்வதற்கு அச்சபை தீர்மானித்தது.

அத்தீர்மானத்திற்கு இணங்க தயார்செய்யப்பட்ட நேர அட்டவணை 30.08.2017 அன்று நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ருவன் இந்திக சில்வா முன்னிலையில் கையளிக்கப்பட்டது.
இதன்படி இப்பாதையில் போக்குவரத்துகள் இடம்பெறவேண்டும், இதனை நடைமுறைப்படுத்தாவிட்டால் பொலிஸாருக்கு சட்ட நடவடிக்கை எடுக்கக்கோரி நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

-டீ. சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here